Skip to main content

ரஜினி பின்னணியில் பெரும் முதலாளிகள் - பழங்குடி மக்கள் சங்கத் தலைவர்

Published on 01/01/2018 | Edited on 01/01/2018
ரஜினி பின்னணியில் பெரும் முதலாளிகள் - பழங்குடி மக்கள் சங்கத் தலைவர்



போதிய விழிப்புணர்வு இல்லாத திடீர் அரசியல் என ரஜினி அரசியல் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் தலைவர் வி.பி.குணசேகரன். 

அவர் மேலும் கூறுகையில், 

இன்று புத்தாண்டு தினம், நேற்று இரவு முதல் நாடெங்கிலும் உள்ள பல்லாயிரம் மக்கள் இந்த புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாடி வருகிறார்கள். அதே நேரத்தில் நாட்டிலுள்ள 95-விழுக்காடு மக்களுக்கு இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடாமல், அதற்கான எந்த மகிழ்ச்சியுமில்லாமல் தங்களின் அன்றாட வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

     இன்று காலையில், தமிழகமெங்கும் உள்ள பல இலட்சம் மக்கள் சாப்பாட்டுப் பையை கையில் எடுத்துக்கொண்டு அறுவடைக்கும், உழவுப் பணிகளுக்கும், ஆடு-மாடுகளை மேய்க்கவும், நெசவு செய்யவும், கூலிவேலைக்கும் சென்று கொண்டுள்ளனர். அவர்களெல்லாம் இன்று உழைத்தால் மட்டுமே நாளைக்கு சாப்படு என்ற நிலையில் உள்ளனர்.

     இந்த ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கையில் அரசியல் தினமும் குறுக்கிடுகிறது. அதுதான் இவர்களை இந்த நிலையில் வைத்துள்ளது என்பது அவர்களுக்கே புரியவில்லை. ஏழை, ஏழையாகவே இருக்கவும், பணக்காரன் மேலும் பணக்காரானாக மாறிக் கொண்டிருப்பதற்கும் காரணமே இந்த அரசியல்தான் என்பது இவர்களுக்கு தெரியவில்லை.

கடந்த ஒரு ஆண்டாக அரசியல் மிகவும் தாழ்ந்த நிலைக்கு சென்றுவிட்டது. அதை மாற்றம் செய்ய இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் நான் ஆரசியலில் கால் வைக்கப்போவதாகவும், அதுவரை யாரைப்பற்றியும் எந்த விமரிசனமும் செய்யப் போவதில்லை என்று ரஜினி கூறியிருப்பது மக்களை ஏமாற்றும் வேலை. நம் நாட்டு மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு தேவை. அந்த விழிப்புணர்வு வந்து விட்டாலே நல்ல ஆட்சி வந்துவிடும்.

இதற்காக ரஜினி அரசியலுக்கு வரவேண்டிய அவசியமே இல்லை. மகளுக்கான போதிய அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டாலே போதுமானது. அரசியல் தானாக நல்ல நிலைக்கு வந்துவிடும். சாமானிய மக்களுக்கும் சரி, நடிகர் நடிகர் ரஜினிகாந்துக்கும் சரி, போதிய விழிப்புணர்வு இல்லாத இந்த திடீர் அரசியல் வெற்றி பெறாது. வெற்றி பெறவும் கூடாது.

கால் நூற்றாண்டுகாலம் சமூகத்தில் இருந்து முற்றிலும் விலகியிருந்த ரஜினி, இன்று தீடீரென தமிழக அரசியல் களத்தில் கால் வைப்பதன் பின்னணியில் இந்தியாவின் பெரும் முதலாளிகள் அல்லது ஏழை, எளிய மக்களுக்கு எதிரான ஆதிக்க சக்திகள் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்பது தெரிகிறது. இது சமூகத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. இவ்வாறு கூறியுள்ளார். 

சிவசுப்பிரமணியன்

சார்ந்த செய்திகள்