Skip to main content

தமிழக தலைமைச் செயலராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்

Published on 31/01/2021 | Edited on 31/01/2021

 

 Rajiv Ranjan appointed Chief Secretary of Tamil Nadu

 

தமிழக தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த சண்முகம் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

தமிழகத்தின் 47வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன்  நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் பணிகளில் இருந்து தமிழக அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் ராஜீவ் ரஞ்சன் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1961-இல் பிறந்த ராஜீவ் ரஞ்சன் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். ராஜீவ் ரஞ்சன் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நல்ல புலமை மிக்கவர். மத்திய அரசின் ஜி.எஸ்.டி கவுன்சில் சிறப்பு செயலாளராக பணியாற்றி உள்ளார்.  அதேபோல் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை செயலாளராகவும் இருந்தார். இந்நிலையில் இன்று அவர் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

அதேபோல் ஓய்வு பெற்ற முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்