கழுத்தை அறுத்து தற்கொலைக்கு
முயன்ற ராஜஸ்தான் இளைஞர்கள்!
முயன்ற ராஜஸ்தான் இளைஞர்கள்!
புதுக்கோட்டை ரயில்நிலையத்தில் ராஜஸ்தானை சேர்ந்த 2 இளைஞர்கள் கழுத்து அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு சென்ற வடமாநில இளைஞர்கள் இருவர் ரயில் எப்போது வரும் என விசாரித்துள்ளனர். அப்போது ரயில் சென்றுவிட்டதாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய இரு இளைஞர்களும் திருவப்பூர் அருகே பிளேடால் தங்கள் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இந்நிலையில் இருவரும் மயங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர், திருக்கோகர்ணம் காவல் நிலைத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்தத்தோடு கிடந்த இருவரையும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்கொலைக்கு முயன்ற அந்த 2 இளைஞர்களும் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் கட்டுமானப் பணிக்காக புதுகோட்டைக்கு வந்துள்ளனர் என்பதும் முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை நடந்துவருகிறது.
- இரா.பகத்சிங்