Skip to main content

முக்கிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

kl;

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தேனி, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 
 

 

சார்ந்த செய்திகள்