Published on 12/12/2024 | Edited on 12/12/2024
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அபிராமி என்பவர் வசித்து வருகிறார். கர்ப்பிணிப் பெண்ணான இவருக்கு அவரது மாமியாரும், கணவரும் சேர்ந்து வீட்டிலேயே யூடியூப்பை பார்த்து பிரசவம் பார்த்துள்ளனர். இதில் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், முதல் கர்ப்பத்தின் போது குழந்தை இறந்ததால் அலோபதி மருத்துவம் மீது நம்பிக்கையில்லாமல் வீட்டிலேயே அபிராமியின் குடும்பத்தினர் பிரசவம் பார்த்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 2வது கர்ப்பத்தை சுகாதாரத்துறையினரிடம் மறைத்ததாகவும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.