புதுக்கோட்டையில் தினகரன் ஆதரவாளர்களின் பிரம்மாண்ட பேரணி!
டிடிவி தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றிக்கு பிறகு அவரது அணிகள் தமிழகம் முழுவதும் பிரமாண்ட பேரணிகள் நடத்தி வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இந்த வகையில் புதுக்கோட்டையில் தினகரன் அணி மா.செ பரணி, மணமேல்குடி கார்த்திகேயன் தலைமையில் மகளிர் கல்லூரி எதிரே உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி திருச்சி மாவட்டத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் வாகனங்களில் வந்து கலந்து கொண்டனர்.
பேரணி பேருந்து நிலையம் வழியாக எம்.ஜி.ஆர் சிலை வரை சென்றது. முடிவில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பேரணியில் கலந்து கொண்ட சிலர்..
தினகரன் அணியின் மா.செ வாக பரணி கார்த்திகேயன் அறிவிக்கப்பட்ட போது சிலைகளுக்கு மாலை அணிவிக்க அமைச்சர் விஜயபாஸ்கர், மா.செ வைரமுத்து, ந.செ. பாஸ்கர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக செயல்பட்டனர். அதனால் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பெற்றும் கூட அன்றே அமைச்சர் தரப்பும் பேரணி மாலை அணிவிக்க அனுமதி கேட்டதால் போலிசார் இரு தரப்பினருக்கும் அனுமதி மறுத்ததுடன் 144 தடை உத்தரவும் போட்டார்கள். ஆனால் இன்று எங்கள் அணியில் ஆதரவை பார்த்து அ.தி.மு.க வுக்கே பிரமிப்பாக உள்ளது என்றனர்.
- இரா.பகத்சிங்