Skip to main content

புதுக்கோட்டை - டெங்கு காய்சலுக்கு ஒரே நாளில் 2 மாணவிகள் பலி

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
புதுக்கோட்டை - டெங்கு காய்சலுக்கு ஒரே நாளில் 2 மாணவிகள் பலி



புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சலுக்கு  சுமார் 50 க்கும் மேற்பட்ட வர்கள் பலியானார்கள்.  இந்த நிலையில் இந்த ஆண்டும் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரவியுள்ளது. இதில் குழந்தைகளே அதிகமாக உள்ளனர். கடந்த சில நாட்களுக்குள் மட்டும் சுமார் 15 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதிலும் குழந்தைகளே ஏராளம்.

   இந்த நிலையில் இன்று பெருங்களூர் கிராமத்தைச் சேர்ந்த கோகிலா (9) என்ற சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பல நாட்களாக தஞ்சை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    அதே போல அறந்தாங்கி அருகே உள்ள வீரராகவபுரம் கிராமத்தை சேர்ந்த யாழினி (12) என்ற மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல நாட்கள் சிகிச்சைக்கு பிறகு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.   ஒரே நாளில் 2 மாணவிகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்