புதுச்சேரி மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை முறைகேடு: 13 பேர் மீது சிபிஐ வழக்கு
புதுச்சேரியில் மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை முறைகேடு தொடர்பாக 13 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நரேந்திரகுமார், பாபு, சுகாதார துறை இயக்குநர் ராமன் மற்றும் சென்டாக் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ராமன் வீட்டில் சி.பி.ஐ சோதனை நடத்தி வருகிறது. மருத்துவ படிப்புக்கான செண்டாக் கலந்தாய்வு முறைகேடு புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புதுவை செண்டாக் அலுவலகத்தில் ஜூன் 27-ல் சிபிஐ சோதனை நடத்தியது.
சோதனையில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிந்து விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
- சுந்தரபாண்டியன்