புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 500 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்நிலையில் ஜெயிலில் இருந்து பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் செல்போன் மூலம் வெளியில் உள்ள குற்றவாளிகளிடம் பேசி வருவதாக புகார்கள் எழுந்து வந்தன. இதையடுத்து கடந்த மாதம் 15-ஆம் தேதி சிறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் விக்னேஷ், சத்யராஜ், தமிழ் ஆகிய 3 பேர் செல்போன் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து 4 செல்போன்கள் மற்றும் சார்ஜர்கள் கைப்பற்றப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று மீண்டும் சிறை கண்காணிப்பாளர் கோபிநாத் தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கைதிகளின் பல்வேறு அறையிலிருந்து 12 செல்போன்கள், 13 சிம் கார்டுகள் மற்றும் சார்ஜர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சிறை அதிகாரி காலாப்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரின் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.