கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்தது. இதனால் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் பாசனம் மற்றும் வடிகால் வாய்கால்களில் ஆகாய தாமரை செடிகள் அதிகம் உள்ளதால் தண்ணீர் வேகமாக செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதனையொட்டி சிதம்பரம் கோட்ட பொதுப்பணித்துறை சார்பில் சிதம்பரம் நகரத்தையொட்டியுள்ள தில்லையம்மன் ஓடை, கான்சாகிப்வாய்கால், பாசிமுத்தான் ஓடை என பாசனம் மற்றும் வடிகால் வாய்கால்களில் உள்ள ஆகாய தாமரை செடிகளை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ் தலைமையிலான ஊழியர்கள் ஆகாய தாமரை செடிகளை வலைகளை கொண்டு அகற்றி வருகிறார்கள்.
இதனை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். மேலும் இந்த ஆகாய தாமரை செடியால் ஒவ்வொரு ஆண்டு பாசனத்தின்போது வாய்காலில் தண்ணீர் வருவதை தடுக்கிறது. எனவே இதுமேலும் வளராமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.