Skip to main content

குப்பை கிடங்கை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்...

Published on 10/10/2020 | Edited on 10/10/2020

 

 Public said no to garbage dump - Authorities return

 

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வலையாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் நகரில் ஊராட்சி சார்பாக ரூபாய் 23 லட்சத்தில் குப்பை கிடங்கு அமைக்கப்பட உள்ளது.  குப்பை கிடங்கு அமைக்கப்படும் இடத்திற்கு அருகே குடியிருப்பு பகுதி இருப்பதால் இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களது எதிர்ப்பு குறித்து கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். அதில், அரசு பள்ளி, கோயில், மசூதி, வீடுகள் இருப்பதால் இங்கே குப்பை கிடங்கு அமைக்கக்கூடாது எனக்கூறியிருந்தனர். மீறி இந்த இடத்தில் குப்பை கிடங்கை கட்டினால் முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

 

இந்நிலையில் அக்டோபர் 9ஆம் தேதி காலை குப்பை கிடங்கு அமைக்க அதிகாரிகள் அந்த இடத்தில் பள்ளத்தை தோண்ட  ஆரம்பித்தனர். இதனால் ஆத்திரமடைந்த காமராஜர் நகர் மற்றும் உமர் நகர் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு இங்கே குப்பை கிடங்கு கட்டக்கூடாது என்று போராட்டம் நடத்தினர். சமாதானம் செய்யவந்த அதிகாரிகள் பின்னர் அங்கிருந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்