வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் காலை 10.30 மணியளவில் நகர வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு, மத்திய பா.ஜ.க.அரசின் தொழிலாளர், விவசாயிகள் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ரிசர்வ் வங்கியிலிருந்து எடுத்த ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை பொது முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும், பொருளாதார நெருக்கடியால் ஆலை மூடல் ஆட்குறைப்பிற்குள்ளான இளைஞர்களுக்கு வேலை இல்லாத காலத்திற்கு நிவாரணம் வழங்கிட வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.18,000 சம்பளம் வழங்கவும்.
மேலும் பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல், இராணுவத் தளவாட தொழிற்சாலைகள், இந்திய ரயில்வே, ஏர் இண்டியாவவை தனியாருக்கு தாரை வார்ப்பதை உடனே நிறுத்தவும், வயதான மற்றும் விதவைகளுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ. 3000ம் என உயர்த்தி வழங்கிட வேண்டும், மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உத்திரவாதச் சட்டத்தின் கீழ் வேலை நாட்களை 200 நாட்களாக அதிகரித்திட வேண்டும், நிலுவை கூலி தொகையை உடனே வழங்கிட வேண்டும், விவசாயிகளுக்கு விவசாய நெருக்கடியிலிருந்து மீள ஒருமுறை கடன் தள்ளுபடி செய்திட வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன் நிறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்துக்கொண்டு மத்தியரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.