புழல் சிறையில் கைதி தற்கொலை..!
புழல் சிறையில் கணேஷ் என்ற கைதி பிளேடால் கையை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணேஷ் உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார். கணேஷ் தற்கொலை சம்பவம் தொடர்பாக புழல்சிறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகிறார்கள். மேலும் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் தற்கொலை என்ற பெயரில் மர்மமாக இறந்து நேற்று முன்தினத்தோடு ஓர் ஆண்டு முடிந்தது ..! பல சிறைகைதிகளின் தற்கொலை இதுவரை உண்மை வெளிவராமல் போவதும் தொடர்கதையாகி வருகிறது.
: அரவிந்த்