ஆளுநரின் செயல்பாடுக்கு முதல்வர் பாராட்டு!
புத்தாண்டு பாதுகாப்பு தொடர்பாக ஆளுநர் கிரண்பேடி நேரடியாக இணைந்து பார்வையிட்டது பாராட்டக்கூடியது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மாநில வளர்ச்சிக்கும் மக்கள் நலத்திட்டங்களையும் அரசு முழுமையாக நிறைவேற்றியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் புத்தாண்டு பாதுகாப்பு தொடர்பாக ஆளுநர் கிரண்பேடி நேரடியாக இணைந்து பார்வையிட்டது பாராட்டக்கூடியது.
முத்தலாக் மசோதா குறித்து சம்மந்தப்பட்டவர்களிடம் கருத்து கேட்காமல் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும்.
அரசியலுக்கும் ஆன்மிகத்திற்கும் தொடர்பில்லை; நடிகர் ரஜினியின் பேட்டியில் தெளிவில்லை. அரசியல் கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை உள்ளது. அதிமுகவில் நிலவும் குழப்பத்தை பயன்படுத்தி கட்சி தொடங்குகிறார் என்றும் கருதலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.