Skip to main content

கர்ப்பிணி மரணம்: எட்டி உதைத்த காவல்துறை ஆய்வாளரை கைது செய்ய வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்

Published on 08/03/2018 | Edited on 08/03/2018


 

k.balakrishnan cpim


திருச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை காவல்துறை ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் மரணம் அடைந்தார். இதற்கு நியாயம் கேட்டு மறியல் செய்த பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். போலீசார் தடியடி நடித்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
 

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளதாவது, 
 

திருச்சியில் இன்று இரவு சுமார் 07.30 மணியளவில் தஞ்சாவூர் - திருச்சி நெடுஞ்சாலையில், துவாக்குடிக்கு அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை பின்தொடர்ந்து சென்று காவல்துறை ஆய்வாளர் எட்டி உதைத்ததில் உஷா என்ற கர்ப்பிணி பெண் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார், அவரது கணவர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் பதற்றமடைந்து சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளரை கைது செய்து, கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். அமைதியான முறையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்களை கைது செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிகின்றன. காவல்துறையினரின் இந்த வன்முறை வெறியாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
 

கர்ப்பிணி பெண் உஷா மரணத்திற்கு காரணமான காவல்துறை ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, உடனடியாக அவரை கைது செய்ய வேண்டுமெனவும், அமைதியாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தடியடி தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கைது செய்யப்பட்ட பொதுமக்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒன்றிய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் (படங்கள்)

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

 

விலைவாசி உயர்வுக்கு, வேலையின்மைக்குக் காரணமான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ரயில் மறியல் போராட்டம் கிண்டி ரயில் நிலையத்தில் நடந்தது. 
 

 

 

Next Story

"வட மாநிலத்தவர்கள் இல்லை என்றால் தமிழ்நாட்டில் தொழில்கள் நடத்த முடியாது" -  கே.பாலகிருஷ்ணன்

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

cpim balakrishnan talks about north indian laboures at karur 

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கரூர் சுங்க கேட் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது அவர் பேசுகையில், “பாஜக ஆட்சி எல்லை தாண்டி போகிற ஆட்சியாக இருக்கிறது. முழுமையாக பாராளுமன்றத்தை நடத்த முடியாத ஆட்சியாக பாஜக உள்ளது. அதானி விவகாரத்தில் முறைகேடு நடந்ததா, இல்லையா என்பதை விசாரணைக் குழு நடத்தட்டும். அதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பட்ஜெட்டை கூட விவாதிக்காமல் இருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் கூட விசாரணைக் குழு அமைக்க முன் வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் அதை விவாதிக்க முடியாத நிலை உள்ளது. சொத்து குவிப்பிற்கும், மோடிக்கும் தொடர்பு உள்ளது. அதானியும், மோடியும் கூட்டாளிகள் தான்.

 

அவசரகதியில் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. வீட்டை காலி செய்ய நோட்டீஸ் வழங்கி இருக்கிறார்கள். 30 நாள் நீதிமன்றம் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் ஏன் அவசரமாக ராகுல் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. டோல்கேட் கட்டணத்தை உயர்த்தியதால் நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலை காரணமாக பெரும் பிரச்சினையாக உள்ளது.

 

டெக்ஸ்டைல் தொழில் நகரமான கரூரில் குறைவான ஆர்டரே கிடைத்துள்ளதால் தொழில் முடங்கி கிடக்கிறது. சர்வாதிகார போக்கை நோக்கி மத்திய ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. பட்ஜெட்டில் நல்ல திட்டங்களை மாநில அரசு கொண்டு வந்துள்ளது. அதனை நம் கட்சி வரவேற்றுள்ளது. நல்ல திட்டங்களை வரவேற்கிறோம். அதே நேரத்தில் நிதி அமைச்சர் சொல்லும் கருத்து அவரது சொந்த கருத்தா அல்லது அரசின் கருத்தா என்பது தெரியவில்லை. அந்த மாதிரியான பொருளாதார கொள்கைகளை அமல்படுத்தினால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். சிறு, குறு தொழில்களை ஊக்கப்படுத்த வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை செயல்படுத்த வேண்டும். 152 அரசாணையின் படி அவுட் சோர்சிங் முறையை மாற்ற வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு திட்டத்தில் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

 

தொகுப்பூதியம், மதிப்பூதியத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். 10 ஆயிரம், 12 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும். அவுட் சோர்சிங் முறையை மாற்ற வேண்டும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். மின்சாரத் துறையில் உள்ள பிரச்சினைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசி முடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். அது போல மற்ற துறை அமைச்சர்களும் பேசி தீர்வு காண வேண்டும். மற்ற விஷயங்களை பாராட்டினாலும், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். அதிமுக திட்டங்கள் நிறுத்தப்படவில்லை. லேப்டாப் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவோம் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

 

எந்த ஒரு நிவாரண திட்டமும் அனைவருக்கும் கொடுக்கத் தேவையில்லை. யாருக்கு தேவை என்பதை உணர்ந்து அவர்களுக்கு கொடுப்பதுதான் நல்லது. குறைவான வருமானம் உள்ள பெண்களுக்கு வழங்கப்படும் போது பார்க்கலாம். வடமாநிலத் தொழிலாளர்கள் இல்லை என்றால் தமிழகத்தில் தொழில்கள் நடத்த முடியாது. தமிழ்நாட்டின் தொழில் விஸ்தரிப்பால் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். தமிழகத்தை சார்ந்தவர்கள் வெளி மாநிலங்களில் வேலை பார்த்து இருக்கிறார்கள். அரசு வேலை கொடுக்கும் போது, தமிழ்நாடு இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்றார்.