Skip to main content

நடுகடலில் முழ்கிய ஒரு கோடி மதிப்பிலான விசைப்படகு

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

A power boat worth one million sunk in the middle sea!

 

நடுக்கடலில் படகு பழுதாகி தத்தளித்த மீனவர்களை மீட்க சென்றபோது  1 கோடி ரூபாய் மதிப்பிலான விசைப்படகு முழுவதும் மூழ்கி விபத்துக்குள்ளானது. பலத்த காயங்களுடன் நாகை துறைமுகம் வந்த மீனவர்களை பார்த்து மீனவ பெண்கள் கதறி அழுத சம்பவம் பலரையும் உறைய வைத்துள்ளது

 

நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்கள் 24ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று நள்ளிரவு அவர்களுடைய விசைப்படகு பழுதாகி 13 மீனவர்களும் நடுகடலில் தத்தளித்தனர். இதுகுறித்து தகவலறிந்த அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அருண் தனக்கு சொந்தமான விசைப்படகில் வசந்தன், ராம்குமார் ஆகிய மீனவர்களுடன் அவர்களை மீட்பதற்கு சென்றுள்ளனர். அப்போது அருணுக்கு சொந்தமான விசைப்படகில் திடீரென விழுந்த ஓட்டையின் காரணமாக படகினுள் கடல்நீர் உட்புக தொடங்கியுள்ளது. இதனை பார்த்து கதறி சத்தம் எழுப்பிய மீனவர்கள் படகின் ஏற்பட்ட துளையை அடைக்க முயன்றும் முடியாமல் போனதால் 1 கோடி ரூபாய் மதிப்பிலான விசைப்படகு முழுவதும் நடக்கடலில் மூழ்கியது. 

 

இதனை பார்த்த சக மீனவர்கள் கடலில் தத்தளித்து காயமடைந்த அருண் உள்ளிட்ட மூன்று மீனவர்கள் மற்றும் படகு பழுதாகி தவித்த 13 மீனவர்களையும் மீட்டனர். 1 கோடி ரூபாய் மதிப்பிலான படகை இழந்து இரவில் நாகை துறைமுகம் அழைத்து வரப்பட்ட மீனவர்களை கண்டு அங்கு திரண்டிருந்த அவரது உறவினர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மீனவ பெண்கள் கண்ணிர் விட்டு கதறி அழுதனர். 

 

வட்டிக்கு கடன் வாங்கி, நகைகளை அடகு வைத்து கட்டப்பட்ட விசைப்படகு மூழ்கியதால் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருவதாகவும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மீனவ பெண்கள் தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்