பொறையார் பணிமனையில் இறந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி
நாகை மாவட்டம் பொறையார் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் ஓய்வு அறைக் கட்டிடம், கடந்த 20ஆம் தேதி இடிந்து விழுந்ததில், 8 போக்குவரத்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
உயிரிழந்த போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பொறையாரில் மெளன ஊர்வலம் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற அரசு போக்குவரத்துக் கழகத்தின் சக ஊழாயர்களும் வர்த்தகர்கள், பொதுமக்களும் அமைதியான முறையில் மெளனஊர்வலமாக சென்று இறந்தவர்களின் உருவப் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஊர்வலம் பொறையார் கடை வீதியிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியே, அரசு போக்குவரத்து கழக பணிமனையில் முடிவடைந்தது, அங்கு வைக்கப்பட்டிருந்த இறந்த தொழிலாளர்களின் உருவப் படத்திற்கு, மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
க.செல்வகுமார்