Skip to main content

பிரபல குணச்சித்திர நடிகர் சண்முக சுந்தரம் காலமானார்!

Published on 15/08/2017 | Edited on 15/08/2017
பிரபல குணச்சித்திர நடிகர் சண்முக சுந்தரம் காலமானார்!



பிரபல குணச்சித்திர நடிகர் சண்முக சுந்தரம் உடல்நலக்குறைவால் காலாமானார். அவருக்கு வயது 79. சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த சண்முக சுந்தரம் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் இன்று திடீரென உடல் நிலை மோசமாகி உயிரிழந்தார். மறைந்த சண்முகசுந்தரம் இதயக்கனி, குறத்தி மகன், சென்னை -28, சரோஜா உள்பட நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். ரத்தத்திலகம் படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தன்னுடைய குணச்சித்திர நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். அவருடைய மறைவிற்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

சார்ந்த செய்திகள்