திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பூவெல்லாம்பேடு, ஊராட்சி மன்றத் தலைவர், தி.மு.க. பிரமுகர் வெங்கடாசலபதி. இவரது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாகவும், இவரின் அலட்சியமாக இருந்ததால்தான் நோய் தொற்று ஏற்பட்டதாகவும் சிலர் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து நாம் வெங்கடாசலபதியிடம் பேசினோம். அப்போது அவர், புற்று நோயால் பாதிக்கப்பட்ட எனது சகோதரர் சீனிவாசன் (வயது 68) உடல் நலக்குறைவால் 02.07.2020 மாலை 5.30 மணியளவில் காலமானார். மறுநாள் 03.07.2020 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கொரோனா நோய் தொற்றின் தீவிரத்தை மனதில் வைத்தே நான் என்னுடைய கட்சி நிர்வாகிகளுக்கோ, பிற ஊராட்சி மன்ற தலைவர்களுக்கோ, நண்பர்களுக்கோ துக்க செய்தியை தெரிவிக்கவில்லை. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
கடந்த 17.07.2020 அன்று காலை பூவலம்பேடு கிராமத்தின் மற்றொரு பகுதியில் வசித்து வந்த முன்னாள் உள்ளாட்சி மன்ற தலைவரின் கணவர் ஆறுமுகம் (அ) அந்தோணி (வயது 68) என்பவர் உடல் நலக் குறைவால் காலமாகி விட்டார். அவரது உடல் அன்றே அடக்கம் செய்யப்பட்டது.
பின்னர் கடந்த 18.07.2020 சனிக்கிழமை இரவு சுமார் 08.00 மணி அளவில் பூவலம்பேடு கிராமத்தில் எனது பெரியம்மா ஜெயலட்சுமி (வயது சுமார் 98 ) என்பவர் முதுமை காரணமாக இறந்துவிட்டார். அவரது உடல் மறுநாள் 19.07.2020 ஞயற்றிகிழமை காலை 10.30 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. இந்த துக்க நிகழ்ச்சியிலும் மிகக் குறைந்த அளவே நெருங்கிய உறவினர்கள் கலந்துக்கொண்டனார்.
இதன்பின்னர் கடந்த 21.07.2020 அன்று எனது மனைவி புனிதவள்ளிக்கு காய்ச்சலும் தலைவலியும் இருந்தது. எனவே 22.07.2020 அன்று காலை அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அன்று மாலை சுமார் 7.00 எனது மனைவிக்கு COVID 19 +ve என்று ரிசல்ட் கிடைத்ததால் அவரை 23.07.2020 அதிகாலை 2.00 மணிக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகைச்சைக்காக அனுமதிக்கப்பட்டர். பின்னர் 27.07.2020 அன்று மாலை 6.00 அளவில் டிச்சர்ஜ் செய்யப்பட்டு தற்பொழுது பூவலம்பேட்டில் உள்ள சொந்த வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் எங்கள் கிராமத்தில் நடத்திய மருத்துவ முகாமில் சுமார் 100 பேர் Swab Test மற்றும் பிற பரிசோதனைகளை செய்து கொண்டனர். இதில் மொத்தம் 27 பேருக்கு Covid 19 +ve என தெரியவந்ததால் அனைவரும் அன்றே திருவள்ளூர் DD மெடிக்கல் காலேஜ் மற்றும் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் கோவிட் சென்டர்களில் அனுமதிக்கப்பட்டு நலமுடன் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 28/07/2020 அன்று என்னுடுடைய சகோதரர் இறுதி சடங்கில் கலந்து கொண்டவர்கள் மூலம் மேற்படி 27 பேருக்கும் கொரோனா தொற்று தொற்றியதாகவும் அதற்கு என்னுடைய அலட்ச்சியமே காரணம் என்றும் முற்றிலும் பொய்யான செய்தியை வேண்டும் என்றே சிலர் வெளியிட்டுள்ளார்கள்.
எனது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரரங்களில் இது பற்றிய செய்தியை Whats app மற்றும் எனது Facebook பக்கத்தில் வெளிட்டு அடுத்து வரும் சில மாதங்களுக்கு துக்க நிகழ்ச்சிகளில் முடிந்தவரை கலந்து கொள்வதை அனைவரும் தவிர்த்து சமூகத்திற்கு உதவிவிட வேண்டும் என்று விழிப்புணர்வு செய்தியை பதிவிட்டேன். அது பலராலும் பாராட்டப்பட்டது. அதற்கான சான்றிதழ்களும் எங்களிடம் இருக்கிறது இதோ பாருங்கள். முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியை சிலர் வெளியிட்டுள்ளார்கள். அதனை கண்டிக்கிறோம் என்றார்.