![கதச](http://image.nakkheeran.in/cdn/farfuture/iIAJ8qUcV1yXZKVqqM1UsUaTUBugAVfNHZTGRfr2CfU/1610331361/sites/default/files/inline-images/56_29.jpg)
பொங்கலுக்காக வெளியூர் செல்ல சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஆண்டுதோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு ஜனவரி 14- ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு தமிழகம் முழுவதும் 30,120 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி சென்னையில் இருந்து மட்டும் பல்வேறு இடங்களுக்கு 16,075 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.
சென்னையில் இருந்து 4,078 பேருந்துகளும், பிற இடங்களில் இருந்து 5,993 பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது. சிறப்பு பேருந்து குறித்த தகவல், புகாருக்கு 94450- 14450, 94450- 14436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com என்ற இணைய தளங்களைப் பயன்படுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.