பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்புடைய பெண்ணின் அண்ணனைக் தாக்கிய அடிதடி வழக்கை மார்ச் 7 ஆம் தேதி கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நகையை பறித்ததாக கடந்த 2019 -ம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பின்னரே பல பெண்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது சில வீடியோக்கள் மூலம் வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் திருநாவுக்கரசு என்கிறவன் முக்கிய குற்றவாளியாகவும், அதைத் தொடர்ந்து சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் என மூவர் கைது செய்யப்பட்டனர்.
அதன் பின்னர் மார்ச் 26-ந் தேதி பொள்ளாச்சி ஜோதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே புகார் கொடுத்த பெண்ணின் அண்ணண் மீது தாக்குதல் நடத்தியதாக சொல்லப்பட்ட வழக்கில் பாபு, செந்தில், வசந்தகுமார்ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டனா். தலைமறைவாக இருந்த மணிவண்ணன் என்பவா் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பாலியல் வன்கொடுமை வழக்கிலும் மணிவண்ணனுக்கு தொடா்பிருந்ததால் அந்த வழக்கிலும் இவா் சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் மேல் நடவடிக்கையை கைவிடுவதாக கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி சிபிஐ அறிக்கை தாக்கல் செய்திருந்தது. சிபிஐ கைவிடுவதாக தெரிவித்த இந்த வழக்கில் ஆட்சேபனை தெரிவிப்பது தொடர்பாக பாதிக்கபட்டவர்கள் தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்பதால் வழக்கை தொடர்ந்து இருமுறை தலைமை குற்றவியல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.