தமிழக அரசியல் பலவிதமான இன்னல்களை சந்திக்கிறது: ஜி.கே.வாசன்
மதுரையில் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் கல்வத் நூர்தீன் என்பவருடைய கேட்டரிங் கல்லூரியின் 15ம் ஆண்டு துவக்க விழா பழங்காநத்ததில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், தமிழக அரசியல் பலவிதமான இன்னல்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. நான் ஆளும் கட்சியும் இல்லை. எதிர்கட்சியும் இல்லை. இப்போது இருக்கும் அதிமுக 2 அணியாக இருந்தது. இப்போது 3வது அணி உருவாகி ஆட்சியும், கட்சியும் மக்களும் குளப்பத்தில் உள்ளனர் என்றார்.
ஷாகுல்