Skip to main content

பண மோசடியில் ஈடுபட்ட நபரை கடுமையாகத் தாக்கிய போலீஸ் சஸ்பெண்ட்!

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

Police suspended for severely assaulting a person involved in money laundering

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியை சேர்ந்த படித்த பல இளைஞர்களிடம் பணம் கொடுத்தால் அரசு வேலை கிடைக்கும் என்று சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் பெருமாள் (வயது 36) என்பவர் பல லட்சம் வசூலித்துள்ளார். அதன்படி அவர், கடந்த சில மாதங்களில் சுமார் ரூ.20 லட்சம் வரை பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

 

வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்த பட்டதாரி இளைஞர்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பணம் கிடைக்காத விரத்தியில் பணம் கொடுத்து ஏமாந்த இளைஞர்கள் மேலும் சிலருக்கு வேலை வேண்டும் அதற்கும் பணம் தருவதாக கூறி பெருமாளை புதுக்கோட்டை வரவைத்துள்ளனர்.

 

தொடர்ந்து கீரமங்கலத்தில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான கொட்டகையில் சில நாட்கள் தங்க வைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியான நிலையில் சம்பவ இடத்திற்கு சென்று பெருமாளை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த கீரமங்கலம் போலீசார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பற்றி விசாரணை செய்து வந்தனர்.

 

இந்த நிலையில் பெருமாள் கொடுத்த வாக்குமூலத்தில், தன்னை ஆயுதப்படை போலீஸ்காரர் மாதவன் மற்றும் வசந்த், தினேஷ், ராஷ்குமார் ஆகியோர் தாக்கியதாக கூறியுள்ளார். விசாரணை முடிவில் ஆயுதப்படை போலீஸ்காரர் மாதவனை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும் பெருமாளை தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸ்காரர் மாதவன் மற்றும் வசந்த் ஆகியோரை சிறைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்