போயஸ் கார்டனில் போலீஸ் குவிப்பு!
வாகனங்கள் பலத்த சோதனை!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தை நினைவிடம் ஆக்கப்படும். ஜெயலலிதாவின் நினைவுகளை போற்றும் வகையில் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படும். மேலும், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதால் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து போயஸ்கார்டனில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பலத்த சோதனைகளுக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.