Skip to main content

சனீஸ்வர பகவானை வழிபட வந்த எடப்பாடி பழனிச்சாமியின் மகன்!

Published on 19/12/2017 | Edited on 19/12/2017
சனீஸ்வர பகவானை வழிபட வந்த
எடப்பாடி பழனிச்சாமியின் மகன்!


தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் நவீன் மற்றும் அவரது உறவினர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.



இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் சனிப் பெயர்ச்சி நாளான இன்று, சனீஸ்வர பகவான் விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனை ஒட்டி தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த சுமார் ஆயிரக்கணக்காண பக்தர்கள் சனீஸ்வர பகவானை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் நவீன், அவரது உறவினர்களோடு குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். ஆயிரக்கணக்காண பக்தர்கள் வருகையை ஒட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை செய்திருந்தது.

முதல்வரின் மகன் கோவிலுக்கு வருகிறார் என்ற தகவல் முன்னரே வெளியாகாத சூழலில், திடீரென கோவிலுக்குள் எடப்பாடி மகன் நவீனும் அவரது உறவினர்களும் வந்ததால் போலீசார் சிறிது சிரமப்பட்டனர். இருந்தபோதும், எவ்வித பிரச்சனையும் இன்றி எடப்பாடி மகன் நவீன் சனீஸ்வர பகவானை தரிசித்துவிட்டுச் சென்றார்.

- சக்தி

சார்ந்த செய்திகள்