தேனி அல்லிநகரத்தை சேர்ந்த ஓவியர் தாமோதரன் - அமுதா தம்பதியரின் மகள் உதயகீர்த்திகா உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் நேஷனல் ஏர் ஃபோர்ஸ் யுனிவர்சிடி என்ற அந்நாட்டு விமானப்படை பல்கலைக்கழகத்தில், "ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங்" என்ற நான்காண்டு கால சிறப்புப் பொறியியல் கல்வியை, இறுதியாண்டு தேர்வில் 92.5 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார்.
அதன்பின் கடந்தாண்டு, போலந்து நாட்டில் உள்ள “அனலாக் அஸ்ட்ரோநட் டிரெயினிங் சென்டர்” என்ற விண்வெளி வீரர்கள்களுக்கான பயிற்சி மையத்திலும், போலந்து நாட்டின் ராணுவ அகாடமியிலும் விண்வெளி வீரர்களுக்கான சர்வதே அளவிலான 10 விதமான பயிற்சிகளை இரண்டு மாத காயங்கள் கற்று, வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, இந்தியா திரும்பிய அவர் விண்வெளி வீரர் பயிற்சியின் மற்றொரு முக்கிய பயிற்சியான "பைலட்" பயிற்சி பெறுவதற்கு முன் நடத்தப்படுகிற தேர்வுக்கு டெல்லியில் தங்கி அதற்கான பிரசித்தி பெற்ற நிறுவனம் ஒன்றில் ஒரு மாத காலம் படித்து வந்த நிலையில், கடந்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உலகெங்கும் "கரோனா" நோய்க் கிருமி தாண்டவமாடுவதால் நாடெங்கும் ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், இவர் கற்று வந்த பயிற்சி நிறுவனம் கால வரையின்றி அடைக்கப்பட, மூன்று மாதங்கள் டில்லியிலேயே தங்கியிருந்தார் உதயகீர்த்திகா.
அதன் பிறகு, மூன்று மாதங்கள் டில்லியிலேயே தங்கியிருந்தவர் மத்திய அரசு உள்நாட்டு விமான சேவைக்கு அனுமதி தரவும் மூன்று வாரங்களுக்கு முன்பு சொந்த ஊரான தேனிக்கு வந்து விட்டார்.
ஆனாலும், "கரோனா" வேலையும், வருமானமும் இழந்து உணவுக்கே கஷ்டப்படுகிற ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தாகம் அதிகரித்துக்கொண்டே வர அடுத்துதான் பயிலவிருக்கிற "பைலட்" பயிற்சிக்கு நாற்பது இலட்சம் ரூபாய் வரையில் தேவைப்படுகிற நிலையில், அதற்காக கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த நான்கு இலட்சம் ரூபாயைக் கொண்டு தேனி மாவட்டத்தில் உள்ள தேனி பெரியகுளம். போடி உட்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தனது பெற்றோருடன் சென்று வழங்கி வருகின்றார். அதைக்கண்டு பொதுமக்களும் உதய கீர்த்திகாவை மனதார பாராட்டினார்கள்.