Skip to main content

தற்காலிக தீயணைப்பு நிலையமாக மாறியுள்ள பிள்ளையார் கோயில்!

Published on 29/08/2020 | Edited on 29/08/2020

 

Pillaiyar temple turned into a temporary fire station

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் நிலைய அலுவலர் உள்ளிட்ட இருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சோதனையில் உறுதிசெய்யப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து கரோனா தொற்று ஏற்பட்ட தீயணைப்பு ஊழியர்களை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கோல்டன் ஜூப்ளி விடுதியில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் சிதம்பரம் தீயணைப்பு நிலையம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு தீயணைப்பு நிலையத்திற்குள் யாரும் உள்ளே செல்லாதவாறு கயிறுகட்டி, இது பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலகம் அருகே உள்ள விநாயகர் கோயிலிலுக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தினந்தோறும் கரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று கிருமி நாசினிகளைத் தெளித்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு ஊழியர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்