Skip to main content

நல்லவன்னு பெயர் எடு. ரஜினி தொண்டர்களுக்கு சென்ற கடிதம் (படங்கள்)

Published on 09/08/2017 | Edited on 09/08/2017
நல்லவன்னு பெயர் எடு.. ரஜினி தொண்டர்களுக்கு சென்ற கடிதம்!



நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா?, வரமாட்டாரா? என இன்னும் உறுதியாக அவருக்கே தெரியவில்லை. காலா படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு சில மாவட்ட ரசிர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். திடீரென அதையும் ரத்து செய்தார். அடிக்கடி தமிழகத்தின் முக்கிய அரசியல், அதிகாரிகள், நடுநிலையான விமர்சகர்கள் என பல தரப்பினரையும் சந்தித்து கருத்து கேட்டு வருகிறார்.

ரஜினி மனதில் என்ன இருக்கிறது என தெரியாமல் ரசிகர்களோடு சேர்ந்து அரசியல் வட்டாரமும் குழம்பியுள்ள நிலையில் வரும் 20ந்தேதி திருச்சியில் தமிழருவி மணியன், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என கூட்டம் நடத்துகிறார்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம், சோளிங்கர் பேரூராட்சி மற்றும் ஒன்றியத்தில் உள்ள நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், ரசிகர்களுகள் அனைவருக்கும் ஒரு கடிதம்  வந்துள்ளது. அதில், ஊருக்குள் எந்தவித சாதி, மத வேற்றுமையும் பார்க்காமல் பொதுமக்களுடன் நெருக்கமாகவும், அனைத்து கட்சியினருடன் அன்பாகவும் பழகனும். நமது பகுதியில் நடக்கற எல்லா நல்லது, கெட்டதுகளிலும் முதல் ஆளாக கலந்துக்கொள்ளனும் எனச்சொல்கிறது அந்த கடிதம்.

சோளிங்கர் தொகுதியில் அனைத்து ரசிகர்களுக்கும் இந்த கடிதம் சென்றுள்ளது. சுமார் 1000 ரசிகர்களுக்கு இந்த கடிதம் வந்துள்ளது என்கிறார்கள் கடிதம் வரப்பெற்ற நிர்வாகி ஒருவர்.



வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவரான சோளிங்கர் ரவி தான் அந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். அவர் தரப்பில் நாம் கேட்டபோது, ரசிகர்களை ஒன்றிணைக்கவே இந்த வேலைகளை செய்கிறோம். மற்றப்படி அரசியலுக்கும் இந்த கடிதத்துக்கும் எந்த சம்மந்தமும்மில்லை. தலைவர் என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு சம்மதம்மே என்கிறார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு விழா ஒன்றில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி, விடுதலை சிறுத்தைகள் திருமாளவன், நாம் தமிழர் சீமான் போன்றவர்கள் நல்லவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என பேசினார் என்பது குறிப்பிடதக்கது.

- ராஜா

சார்ந்த செய்திகள்