சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் சென்னை திருவொற்றியூர் பகுதியில் கரோனா அறிகுறி உள்ளதா என வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், "சென்னையில் கரோனாவைத் தடுக்க தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.சென்னை மாநகராட்சியில் 110 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.100 வீடுகளுக்கு ஒரு ஊழியர் என்ற வகையில் ஆய்வு கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 40 இடங்களில் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆய்வில் யாருக்காவது கரோனா கண்டறியப்பட்டால் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்படும்.சென்னை பீனிக்ஸ் மாலின் ஊழியர்கள் 2-பேருக்கு மட்டுமே கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.பீனிக்ஸ் மாலில் வேலை செய்த அனைவருக்கும் ஆய்வு செய்து பார்த்ததில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை.சென்னை பீனிக்ஸ் மாலுக்குச் சென்ற 3,300 பேரை ஆய்வு செய்ததில் இதுவரை யாருக்கும் கரோனா இல்லை". இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் பேசினார்.