பாரதிதாசன் பல்கலை பேராசிரியர்
டேவிட் ஜவகர் பணியிடை நீக்கம்
பாரதிதாசன் பல்கலைக்கழக மேலாண்மை நிறுவன பேராசிரியர் டேவிட் ஜவகர் பணியிடை நீக்கப்பட்டுள்ளார். முனைவர் பட்ட மாணவர்களின் விண்ணப்பங்களைத் தொலைத்ததாக டேவிட் ஜவகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனது அறையிலிருந்து விண்ணப்பங்கள் திருடு போனதால் காவல்நிலையத்தில் டேவிட் ஜவகர் புகார் அளித்துள்ளார்.