Published on 04/03/2021 | Edited on 04/03/2021

சென்னையில் வழக்கம் போல் இன்றும் பெட்ரோல், டீசல் விலை சிறிய அளவில் உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை நேற்றைவிட 2 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ. 93.11 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 86.45-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு வரை தொடர்ந்து விலை உயர்த்தப்படாமல் சீராக இருந்து வந்தது. ஆனால் கடந்த வாரம் முதல் பெட்ரோல் டீசல் விற்பனை தினமும் மாற்றத்துக்குள்ளாகி வந்தது. பெட்ரோல் விலை விரைவில் 100ஐ நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று அச்சத்தோடு பெட்ரோல் விலை உயர்வைக் கவனித்து வருகிறார்கள்.