Skip to main content

அமைச்சரின் கார்களுக்கு பெட்ரோல் பில் தர மறுப்பு! பல்கலைக்கழகம் அதிரடி! 

Published on 28/12/2018 | Edited on 28/12/2018
Petrol bill




உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கும் உயர்கல்வித்துறை உயரதிகாரிகளுக்கும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் ஐந்து கார்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த கார்களுக்கான பெட்ரோல் செலவை இதுவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ஏற்றிருந்தது.

 


இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் வேந்தரான கவர்னர், பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிர்வாக செலவுகளையும் ஊழல்களையும் ஆய்வு செய்து வருகிறார். அனைத்து பல்கலைக்கழகத்திலும் மறைமுகமாக செலவிடப்படும் செலவு கணக்குகள் பல கோடி ரூபாய்களை தாண்டுவதாக சமீபத்தில் ராஜ்பவனின் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

 

இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் 5 கார்கள் அமைச்சர் அன்பழகனுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதும், அதற்கான எரிபொருள் செலவினத்தை பல்கலைக்கழக நிர்வாகமே கொடுத்து வருவதும் கண்டறியப்பட்டு அதிர்ச்சியடைந்துள்ளது  ராஜ்பவன். 

 

இதனைத் தொடர்ந்து, அமைச்சருக்கான கார் பெட்ரோல் செலவை பல்கலைக்கழகம் ஏற்கத் தேவையில்லை என உத்தரவிட்டதன் பேரில்,  அமைச்சரின் கார் பெட்ரோல் பில்லுக்கு பணம் தரமுடியாது என  அண்ணா பல்கலைக்கழகம் மறுத்திருக்கிறது. 

 


"தற்போது பெட்ரோல் செலவினத்தை மட்டும் தர மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அமைச்சருக்கும் உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் கார்களையும் கட் பண்ணுவதற்கு ஆலோசிக்கப்படுகிறது. காரணம், அமைச்சருக்கும் துறையின் செயலாளருக்கும் அரசு தரப்பில் கார்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்கலைக்கழகம் சார்பில் எதற்கு கார்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதுதான்" என்கிறது பல்கலைக்கழக வட்டாரம். 

 

இந்த விவகாரம், உயர்கல்வித் துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார்.