தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 19ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று முன்தினம் (14.07.2021) மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு கடிதம் எழுதியிருந்தது. அதில், பொது இடங்களில் மக்கள் கூடுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறித்தியுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதனால் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பஸ் கண்டக்டர் ஒருவர் எச்சில் தொட்டு டிக்கெட் கொடுத்ததால் பயணிகள் பீதியடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோவையிலிருந்து திருப்பூர் செல்லும் பேருந்தில் கண்டக்டர் எச்சிலைத் தொட்டு பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த பயணிகள், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பேருந்து நேராக ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, உடனடியாக கண்டக்டருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.