தூள் படத்தில் தூள் கிளப்பிய பறவை முனியம்மா தோரனை, கோவில், அஜித்துடன் வீரம், ராஜாதிராஜா, மான் கராத்தே, என 50 க்கு மேற்பட்ட தமிழ் சினிமாவில் அனைத்து முன்னனி நடிகர்களோடும் நடித்துவிட்டார்.
"சிங்கம் போல நடந்துவர்றான் என் செல்ல பேரான்டி.".என எட்டு கட்டையில் பாடிய பறவை முனியம்மா கயித்து கட்டிலில் தன் கடைசி மூச்சை விடுவதற்குள் தன் ஒரே செல்ல மாற்றுதிறனாளி மகன் தென்றலுக்கு ஏதாவது செஞ்சிட்டு போயிடனும் கடைசி நிமிடத்திலும் தன்னோடு நடிச்ச பிரபலங்கள் கைகொடுக்க மாட்டார்களா? தன் மகனைன் எதிர்காலத்தை நினைத்து தன் நெஞ்சுகுழியிலேயே வைத்திருக்கும் ”பறவை முனியம்மாவை சந்தித்தோம்...
"2016ல் என் கணவர் வெள்ளைசாமி இறந்தபிறகு நடிக்க பிடிக்கவில்லை அந்த வருடம் தான் எனக்கு கலைமாமணி விருது கொடுத்தார்கள். அதற்க்கு பிறகு உடல் நிலை சரியில்லாமல் போகவும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வைப்பு தொகையாக 6 லட்சம் என் பெயரில் போட்டு அதிலிருந்து மாதம் மாதம் ஒரு தொகையை எடுத்து செலவு செய்து வந்தேன். தற்போது மீண்டும் உடல்நிலை மிக மோசமாகி கிட்னி பழுதடைந்து நுரையீரலில் நீர்கோர்த்து மூச்சுவிடமுடியாமல் கஷ்டபடுகிறேன் தம்பி. எனக்கு சாவபத்தி பயமில்லை என் மூன்று மகள்களை கரையேற்றிவிட்டேன் ஆனால் ஒரே ஒரு மனகுறைதான் என் மகன் மாற்றுதிறனாளி அவனை நினைத்தால்தான் கஷ்டமா இருக்கு. போனமுறை நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றோர் மருத்துவ செலவு செய்தார்கள். இந்த முறை எனக்கு எதுவும் வேண்டாம் தம்பி இப்ப 81 வயசாகிவிட்டது என் உயிருக்கு உயிரான கணவரே போயிட்டாரு இனி நான் இருந்து என்ன செய்யபோறேன்.
என் முன்னேற்றத்தில் 100% பங்குகெடுத்தவர் அவர் தான் நாங்க இரண்டு பேரும் ஊர் ஊராக சென்று கோவில் திருவிழா என்று எந்த மேடையிலும் சான்ஸ் கேட்டு என்னை பாடவைத்தார். அப்புறம் இதுவரை 50 திரைபடங்கள் 2000 மேடைகளில் பாடல்கள் பாடி மிக பிரபலமாகிவிட்டேன் மற்றபடி என் பெண் பிள்ளைகளை கரையேற்றிவிட்டேன், கடைசியா என் செல்ல மகனை விட்டு போகிறேன் அவனுக்கு ஒன்றும் தெரியாது சூதுவாது தெரியாமல் வளர்த்துவிட்டேன் அதை நினைத்தால்தான் கவலையா இருக்கு. மாற்று திறனாளி அவனுக்கு என் பணத்தை அவனுக்கு வரும்படி செய்து கொடுத்தால் மட்டும் போதும் அத பார்த்துட்டு கண்ணை மூடுவேன் என்று அழுதார் பறவை முனியம்மா...