Published on 20/07/2022 | Edited on 20/07/2022

கோவையில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதால், அப்பகுதி மக்கள் பீதியில் உறங்காமல் தவித்து வருகின்றனர்.
கோவையில் நாள்தோறும் வாகன திருட்டு தொடர்பாக, புகார் வந்த வண்ணம் உள்ளன. வாகனங்கள் எங்கு நிறுத்தப்பட்டிருந்தாலும், அடையாளம் தெரிய நபர்கள் லாவகமாகத் திருடிச் செல்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100- க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக புகார்கள் காவல்துறைக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
இதனால் இரவு நேரங்களில் வாகன உரிமையாளர்கள் நிம்மதியாக உறங்க முடிவதில்லை எனக் கூறப்படுகிறது. இரவு நேரங்களில் காவல்துறையினர் தங்களது ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.