தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனிக்கு வருகை தந்த முருக பக்தர்களால் பழனி நகரமே ஸ்தம்பித்தது.
. தைப்பூச திருவிழாவையொட்டி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அதையொட்டி முருக பக்தர்களும் காரைக்குடி ஈதேவகோட்டை, சிவகங்கை, மதுரை ,திண்டுக்கல் தேனி, திருப்பூர், கோவை உள்பட சில பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும் காவடி எடுத்தும் அலகு குத்தியும் ஆட்டம் பாட்டத்துடன் முருகனை தரிசிக்க முருக பக்தர்கள் வருகை தந்தனர் . அதுபோல் காரைக்குடி நகரத்தார் ஏராளமான நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட வைர வேலை பாராம்பரிய மரப்பெட்டியில் வைத்து மாட்டு வண்டியில் கொண்டு வந்தனர்.
இதனால் அடிவாரம் பகுதிகளில் பக்தர்களின் கூட்டத்தால் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.
தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு திருக்கல்யாணம் நடந்தது வெளிப்பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட மணப்பந்தலில் முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார். விநாயகர் பூஜையுடன் கும்ப கலச ஹோம பூஜை நடந்தது. மங்கலவாத்தியங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது . அதை தொடர்ந்து சுவாமி நான்கு ரதவீதிகளில் வந்ததால் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு தைப்பூச திருவிழாவை யொட்டி பழனி மலைக்கோயிலில் நடைதிறக்கப்பட்டதின் மூலம் அடிவாரத்தில் திரண்டு இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள்பழனி மலையில் உள்ள முருகனை தரிசிக்க படையெடுத்து சொல்கிறார்கள். அதுபோல் துணை முதல்வர் ஓபிஎஸ் குடும்பத்தாருடன் நேற்று இரவு பழனிக்கு வந்து திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு அதன் பின் அதிகாலையில் பக்தர்களோடு பக்தராக பழநிக்குச் சென்று மூலச்சானத்தில் உள்ள நவபாஷானத்தால் ஆன முருகனை தரிசித்துவிட்டு திரும்பினார். அதைத்தொடர்ந்து தைப்பூசத் திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான முருக பக்தர்கள் முருகனை தரிசித்து வருகிறார்கள்.