Skip to main content

“மாணவர்களுக்கு தரமான சைக்கிள் வழங்க” - தமிழக அரசுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
 P Chidambaram urges the TN government To provide quality bicycles to students

தமிழக அரசு பத்தாம் வகுப்பு முடித்து மேநிலை பள்ளி படிப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டும் மாணவர்களுக்கு இலசவ சைக்கிள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு தரமான சைக்கிள் வழங்கும் படி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளபதிவில், “தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இந்தத் தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

சைக்கிள்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள் எவை? 3-4 நிறுவனங்களுக்கு மேல் இருக்க முடியாதே? இந்தத் தரமில்லாத சைக்கிள்களத் திரும்பப் பெற்று அவற்றுக்கு மாற்றாக தரமான சைக்கிள்களை அந்த நிறுவனங்கள் தர வேண்டும் என்று சட்டப்படியான நடவடிக்கைகளத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்