Skip to main content

அடுத்த பிரதமர் யார் என்பதை எங்களின் கூட்டணி தான் தீர்மானிக்கும்: டிடிவி தினகரன்

Published on 15/07/2018 | Edited on 15/07/2018


அடுத்த பிரதமர் யார் என்பதை எங்களின் கூட்டணி தான் தீர்மானிக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத ஊழல் நிறைந்த ஆட்சி. இந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியே வரும். நிச்சயமாக ஆட்சிக்கு முடிவுக்கு வரும். கல்வி தொடர்பாக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காது.

 

 

இன்னும் 7 அல்லது 8 மாதங்களில் வரும் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும். எங்கள் கூட்டணி தான் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். மத்தியில் யார்? ஆட்சி அமைத்தாலும் அடுத்த பிரதமர் யார் என்பதை தமிழக எம்.பி.க்கள் தீர்மானிக்க போகிறார்கள்.

தமிழகத்திற்கு எது தேவையில்லையோ மக்கள் ஏற்கவில்லையோ அதை சரி செய்து நல்ல அரசாங்கம் அமைக்க தமிழக மக்கள் வாக்களிப்பார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நல்ல தீர்ப்பாக இருக்கும். இந்த வழக்கில் 100 சதவீதம் வெற்றி கிடைக்கும். நீதிபதிகளுக்கு யார்? மிரட்டல் விடுத்தார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது.

தமிழகத்தில் ஊழல் அதிகாரித்துவிட்டது. இதை அமித்ஷா சொன்னால் தான் ஏற்பீர்களா. சாதாரண மக்களுக்கும் இது தெரியும். பாஜக தமிழக அரசை பற்றி என்ன விமர்சனம் செய்தாலும் எப்படி பதில் சொல்வார்கள். அவர்கள் தான் மத்திய அரசுக்கு சேவகர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்