தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், மாணவர்களுக்கு இன்று முதல் (அக்டோபர் 23) வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக, தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி மூலமாகவும், தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வுமையம் மூலமாகவும், அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சான்றிதழ் பெற பள்ளிக்கு வரும் மாணவர்கள், முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டுமென்றும் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அரசு சென்னை உயர் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு அசல் சான்றிதழ்களை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வழங்கினார்.