தஷ்வந்த்தை 13ஆம் தேதி ஆஜர்படுத்த செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஹாசினி கொலை வழக்கில் ஆஜராகாததால் தஷ்வந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. டிச.30ம் தேதிக்குள் கொலையாளி தஷ்வந்தை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே தாய் சரளாவை கொலை செய்த வழக்கில் மும்பையில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான் தஷ்வந்த். குற்றவாளி பிடிபட்டதையடுத்து, 13ஆம் தேதி ஆஜர்படுத்துமாறு செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.