


மதுரை விமான நிலையத்தில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி. தினகரனும் சென்னை செல்வதற்காக வர இருந்ததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ண்ன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகிய இருவரும் சென்னை செல்ல விமான நிலையம் வந்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியது.
மேலும் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்தவர்கள் தினகரன் அணியினர் மீது செருப்பை வீசினர். இதனை தொடர்ந்து போலீஸார் இரு தரப்பினரையும் கலைந்து போக செய்தனர், இந்த சம்பவம் மதுரை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருதரப்பினரின் மோதலால் விமான பயணிகள் பயத்துடன் வெளியேறினர்.