Skip to main content

கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்ககூடிய வாய்ப்பை ஸ்டாலினும், திருமாவும் தடுக்கின்றனர்: தமிழிசை பேட்டி

Published on 17/09/2017 | Edited on 17/09/2017
கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்ககூடிய வாய்ப்பை ஸ்டாலினும், திருமாவும் தடுக்கின்றனர்: தமிழிசை பேட்டி!



நவோதயா பள்ளி மூலமாக கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்ககூடிய வாய்ப்பை ஸ்டாலினும், திருமாவும் தடுக்கின்றனர் என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழிசை சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டார். பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நவோதயா பள்ளி விவகாரத்தில், தமிழகத்திற்கு வரும் இந்தி திணிப்பு என பொய்யான வாதம் மேற்கொள்கின்றனர். இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகளின் அழுத்ததிற்கு ஆளாகாமல் நவோதயா பள்ளியை விரைவில் தமிழகத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்ககூடிய வாய்ப்பை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் ஆகியோர் தடுக்கின்றனர். நதிகளை இணைப்பதற்கான வேலைகளை மோடி அரசாங்கம் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்