Skip to main content

சொந்த ஊர் மக்களோடு புத்தாண்டை கொண்டாடிய ஒபிஎஸ்! (படங்கள்)

Published on 02/01/2018 | Edited on 02/01/2018

சொந்த ஊர் மக்களோடு புத்தாண்டை
 கொண்டாடிய ஒபிஎஸ்!

திண்டுக்கல்லில் நடந்த எம்.ஜி.ஆர்.  நூற்றாண்டு விழாவில்  கலந்து  கொண்டுவிட்டு  இரவோடு இரவாக  துணை முதல்வரான  ஒபிஎஸ்  தனது  சொந்த  ஊரான பெரியகுளத்திற்கு சென்று  ஓய்வு  எடுத்தார்.  அதிகாலையில்  புத்தாண்டு  என்பதால் வழக்கம் போல் பெரியகுளத்தில் உள்ள சுப்பிரமணியம்  கோவிலான  பெரிய  கோவிலுக்கு  சென்று சுப்பிரமணியை தரிசித்தார். அப்பொழுது அங்கு  வந்த  பொதுமக்களுக்கு  புத்தாண்டு  வாழ்த்து  கூறியவர் அவர்களுடன் செல்பியும் எடுத்து  கொண்டார்.



அந்த  மக்களோடு உட்கார்ந்து பேசி விட்டு  வீட்டுக்கு  சென்றார்.  அப்பொழுது அங்கு வந்த  மாவட்ட  கலெக்டர்  வெங்கடாசலமும், மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனும்  துணை முதல்வருக்கு புத்தாண்டு  வாழ்த்து  கூறி பொன்னாடை போர்த்தினார்கள்.  அதன் பிறகு சொந்த ஊரில் உள்ள அனாதை  இல்லத்திற்கு  சென்று  அங்குள்ள  குழந்தைகளுக்கு  இனிப்புகள் கொடுத்து புத்தாண்டு  வாழ்த்து  கூறினார்.  அதை தொடந்து மாலையில்  சென்னை  திரும்பினார். 
        

-சக்தி 

சார்ந்த செய்திகள்