தமிழகம் முழுவதும் காலியாக உள்ள, 32 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வில், 6 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.
2,500 பேர் தேர்வு எழுதிய நிலையில், வெறும் 6 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளது, நீதித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்விலும் ஒருவர்கூட பாஸ் ஆகவில்லை.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள 'சந்துரு லா அகாடமி' தலைவர் சந்திரசேகர், “கடந்த 2012ஆம் ஆண்டு, நீதிபதி ராமசுப்ரமணியம் தயாரித்த கேள்வித்தாள் போல தற்போது இல்லை. மேலும், கேள்வித்தாள் கடினமாக உள்ளது. இதில், மல்டிபிள் சாய்ஸ் கேள்வியாகக் கேட்கிறார்கள். ஒரு கேள்வியைப் படிக்க அரைமணி நேரம் ஆகிறது. அதனால், நேரமின்மை காரணமாகப் பல கேள்விகளுக்கும் பதில் எழுத முடியவில்லை. சரியான விதத்தில் கேள்விகள் கேட்கப்பட்டால், மாணவர்களுக்கு எளிதாக இருந்திருக்கும்.
எங்கள் பயிற்சி மையத்தில் பல வக்கீல்கள் படித்து வருகிறார்கள். அவர்கள், தங்களது அனுபவங்களை என்னிடம் கூறினார்கள். இனிமேலாவது, இந்த நிலை மாற வேண்டும். மாறினால், பலரும் வெற்றி பெற்று நீதிபதிகளாகத் தேர்வு ஆவார்கள். தற்போதைய தேர்வில், குறைந்த அளவில் வெற்றி பெற்றது வேதனை அளிக்கிறது” என்கிறார்.