பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு ஒருமணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'மாதிரி ஆன்லைன் தேர்வு செப்டம்பர் 19, 20- ஆம் தேதிகளிலும், விடுபட்ட மாணவர்களுக்கு செப்டம்பர்- 21 ஆம் தேதியும் நடைபெறும். மாணவர்கள் லேப்டாப், வெப் கேமரா வசதியுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு ஒரு மணிநேரம் ஆன்லைனில் நடைபெறும். ஒரு நாளைக்கு நான்கு சுற்றுகளாகத் தேர்வு நடைபெறும்; பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்படும் பாடத்திட்டங்களை மட்டும் படித்தால் போதும். கேட்கப்படும் 40 கேள்விகளில் 30 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்; மாணவர்கள் ஏதேனும் 4 பாடங்களைப் படித்தால் போதும். காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை, பகல் 12.00 மணி முதல் 01.00 மணி வரை, பிற்பகல் 02.00 மணி முதல் 03.00 மணி வரை, மாலை 04.00 மணி முதல் 05.00 மணி வரை நடைபெறும்' எனத் தெரிவித்துள்ளது.
பொறியியல் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு செப்டம்பர்- 24 ஆம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.