வெளிநாட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வந்த இரண்டு பேருக்கு கரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒமிக்ரான் உள்ளதா என கண்டறிய அவர்களது மாதிரிகளை சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்ற 1ம் தேதியில் இருந்து இன்று வரை வெளிநாடுகளிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்கு 183 பேர் வந்துள்ளனர். அதில் 65 பேருக்கு இரண்டு கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இருவருக்கு கரோனோ தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டு அவர்கள் பெருந்துரையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் வெளிநாடுகளில் கரோனா வைரஸ் உருமாறி வேகமாக பரவி வருகிற ஒமிக்ரான் கரோனோ அவர்களுக்கு இருக்கலாம் என்ற அச்சம் அதிகாரிகள் மட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இருவரையும் தனிமைப்படுத்தியதோடு இருவரின் வைரஸ் பரவல் மாதிரிகளை எடுத்து சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இருவரில் ஒருவர் சிங்கப்பூரில் இருந்து வந்தவர் மற்றொருவர் ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.