ஒக்கி புயல்: தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ஒக்கி புயல் தாக்கியபோது கடலில் சிக்கி மாயமான மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க அரசு தேவையான ஏற்பாடு செய்ய வேண்டும். தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். தொழிற் கருவிகளுக்கான இழப்பீடு கணக்கிட்டு உடனடியாக வழங்க வேண்டும். ஹார்பரை உடனடியாக சரி செய்ய வேண்டும். என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ மற்றும் பிள்ளைத் தோப்பு – அழிக்கல் பங்கு தந்தையர்கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேலான மீனவ மக்கள் கணபதிபுரம் அருகே கல்லுக்கட்டி ஜங்ஷனில் ரோட்டில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.