Skip to main content

தமிழ்நாடு முழுவதும் பிரியாணி கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

ரப

 

ஆரணியை அடுத்த துந்தரீகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர், தனது மனைவி பிரியதர்ஷினி, 14 வயது மகன் சரண், 10 வயது மகள் லோசினி என 4 பேரும் ஆரணியில் பிரபலமான 7 ஸ்டார் ஹோட்டலுக்குச் சென்று பிரியாணியும், தந்தூரி சிக்கனும் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த சிறிது நேரத்திலேயே வாந்தியெடுத்து மயக்கமடைந்துள்ளனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மற்ற மூவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையில், சிறுமி மட்டும் செப்டம்பர் 10ஆம் தேதி அன்று மதியம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

 

இந்த விவகாரத்தில் ஹோட்டல் முதலாளி கைது செய்யப்பட்ட நிலையில், இந்த உயிரிழப்பு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரிய அளவில் அளவில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை நடத்திவருகிறார்கள். இந்நிலையில், தற்போது தமிழ்நாடு முழுவதும் பிரியாணி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. இதில் நிறமி பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்