குழாய் வெடிப்புக்கு காரணமான
ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் - மணியரசன்
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் எண்ணை கிணறு அமைக்கு ஒ,என்,ஜிசி திட்டத்தை மக்கள் ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்கள் என காவிரி உரிமை மீட்புகுழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் என்று கூறினார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி வெளியேற வேண்டும் என மூன்றாவது மாதமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்தில் இன்று கலந்து கொண்ட மணியரசன் மக்களுக்கு ஓ,என்,ஜி,சி குறித்தான பாதிப்புகள் அதனால பாதிக்கப்பட மக்களின் நிலமை குறித்து ஆதாரத்துடன் மக்களிடம் விளக்கி பேசினார்.
பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் ஓ.என்.ஜி.சி நிறுவனம் காவிரி பாசன பகுதிகளானா டெல்டா பகுதிகளில் இருந்து வெளியேற மாட்டோம் என திமிராக கூறியுள்ளனர். அவர்களின் ஆனவ பேச்சை கண்டிக்கிறோம். அதோடு 110 இடங்களில் புதிதாக எண்ணை கிணறுகள் அமைக்கப்போவதாக கூறியிருக்கிறார்கள்,
அவர்களை இனி ஒரு கிணறு கூட அமைக்க முடியாது, அமைக்க விடமாட்டோம். தொடர்ந்து ஒ,என்,ஜி,சி குழாய்கள் வெடிப்பு ஏற்படுகிறது. அது சம்மந்த பட்ட அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், விசாரனை மேற்கொள்ளவேண்டும் என்றார்.
-க.செல்வகுமார்