Skip to main content

இனி நான் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை மேற்கொள்வேன்: பொன்.ராதாகிருஷ்ணன்!

Published on 24/04/2018 | Edited on 24/04/2018
jk


இனி நான் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை மேற்கொள்வேன் என மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஊராட்சிகள் தினம் இன்று நாடு முமுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாவட்டம் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் குமரி மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனனால் தத்தெடுக்கப்பட்ட முத்தலக்குறிச்சி ஊராட்சயில் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் வடநேரோ தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில்,

நான் தத்தெடுத்த இந்த கிராமத்தில் நடக்கும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. இந்த கிராமத்துக்கு எனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 லட்சம் செலவு செய்து இருக்கிறேன். குமரி மாவட்டத்தில் மருத்துவ சேவை என்பது மிக சிறப்பாக உள்ளது. கடந்த ஆண்டு 21 ஆயிரம் தாய்மார்களுக்கு நடந்த பிரசவத்தில் 8 பெண்கள் மட்டும் தான் இறந்திருக்கிறார்கள். இதே போல் தொற்று நோய்கள் 90சதவிதம் கட்டுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் நடமாடும் நோய் தடுப்பு மருந்து துறை மூலம் குமரி மாவட்டத்தில் 200 பெண்களுக்கு மார்பக புற்று நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் 65 சதவிதம் பிரசவம் அரசு மருத்துவமனைகளில் நடக்கிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் 10 சதவிகிதமாக இருந்த பிரசவம் தற்போது 35 சதவிகிதமாக அதிகாரித்துள்ளது. இதை 100 சதவிகிதமாக மாற்ற அரசு மருத்துவா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இனி நானும் அரசு மருத்துவமனைகளில் தான் சிகிட்சைக்காக செல்வேன் என்றார்.

பிறகு அவர் தொடா்ந்து சிறப்பு கிராம சபை கூட்டத்தையொட்டி மத்திய பிரதேசத்தில் இருந்து மதியம் 1மணிக்கு பிரதமா் மோடி சிறப்புரையாற்றிய நிகழ்ச்சியை தொலைகாட்சியில் நேரடியாக மக்களோடு மக்களாக உட்கார்ந்து பார்வையிட்டார். இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடுவதற்கு வாய்ப்பில்லை - பொன். ராதாகிருஷ்ணன்

Published on 29/04/2018 | Edited on 29/04/2018

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடுவதற்கு வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 

pon

 

கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

ஸ்டெர்லைட்க்காக போராடியவர்களில் நானும் ஒருவன். ஆனால் ஆலையை தொடங்கும்போது அனுமதி அளித்த ஆட்சியாளர்கள் இப்போது அதற்கு ஏதிராக பேசி வருகின்றனர். கோடிக்கணக்கான ரூபாய் செலவளித்து தொடங்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடுவது சாத்தியமற்ற செயல் எனக்கூறிய அவர்  தன் மீது கல் வீசியவர்களை பாரதிய ஜனதாவின் கைக்கூலிகள் என்று கூறிய வைகோவுக்கு கடும் கண்டம் தெரிவித்து வைகோ பேசும்போது வார்த்தைகளை கவனித்து பேச வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

Next Story

கர்நாடகா தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

Published on 29/03/2018 | Edited on 29/03/2018


கர்நாடகா தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படவில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து மார்த்தாண்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்பட வேண்டும். தமிழகத்தின் நீர் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதற்கு பாஜக 100 சதவீதம் துணை நிற்கும்.

இப்பிரச்சனை தொடர்பாக நேற்று கூட டெல்லியில் மத்திய மந்திரி நிதின் கட்கரியை சந்தித்து பேசினோம். அவரிடம் தமிழக நீர் தேவைகள் குறித்து எடுத்துரைத்தோம். அவற்றை கவனமாக கேட்டுக்கொண்டதோடு இப்பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயற்சி மேற்கொள்ளப்படுமென்று தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் முக்கிய இடங்களில் ஸ்கீம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு யூகங்கள் கிளம்பி உள்ளன. அதற்கு விளக்கம் காணவே மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது. ஸ்கீம் என்பது குறித்து உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியிருந்தால் பிரச்சனையில்லை.

கர்நாடகா தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படவில்லை. காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை.

இதற்காக பாஜக முயற்சி செய்து வருகிறது. நவநீதகிருஷ்ணன் என்னிடம் பேசும்போது எதுவும் கூறவில்லை. இப்பிரச்சனையை அரசியல் ஆக்க காங்கிரஸ் பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.